Thursday, February 27, 2014

தமிழக மாநில காங்கிரஸ்


குழந்தை பிறந்து, ஒன்று, இரண்டு ஆண்டுகள் வரை, நெஞ்சின்மீது போட்டு கொஞ்சி விளையாடுகின்றோம்.

பிறகு, கொஞ்சம் வளர்ந்தவுடன், இடுப்பில் தூக்கிவைத்துக் கொண்டு, வலம் வருகின்றோம்.

அதன்பிறகு, கையைப் பிடித்து, நடை பயில்கின்றோம்.

அதன்பிறகு, சைக்கிள் உட்காரவைத்து, பிடித்துக்கொண்டே, கூடவே ஓடுகின்றோம்.

பிறகு, மெல்ல சைக்கிளில் பிடியை விட்டு விடுகின்றோம்.

அதன்பிறகு, பிள்ளை, நம்மை பின்னாலில் உட்காரவைத்து, பைக்கில் வலம் வருகின்றான்.

பிறகு, விமானம் ஏறி வெளிநாடு சென்று பணியாற்றுகின்றான்.

அப்ப அப்ப, விடீயோவில் வந்து பேசுவான். அவன் அங்கு அனுபவிக்கும் நல்லது கெட்டதுகளை, நம்மிடம் பகிர்ந்து கொள்வான். எதுக்கும் கவலைப்படாமல், குலத்தெய்வத்தை நினைச்சுக்கோ; கூடவே இருக்கும்; ஒரு குறையும் வராது என்று எடுத்துரைப்போம்.

இதுதானே வளர்ச்சி. அதைவிட்டுப்புட்டு, நாற்பது வயசு ஆனாலும்,  அம்மா,  மடியிலே போட்டு பால் சாதம் ஊட்டுவதும்; அப்பா, உனக்கு ஒண்ணும் தெரியாது, என்று சொல்லி, தானே கடைக்குப்போய் மகனுக்கு ஜட்டி வாங்கிக் கொடுப்பதும் சரியல்ல.

பர்கர்; பீட்சா; சிக்கன்; வால்மார்ட்; சிட்டி பேங் என்று, உலகத்தில் எங்கோ கோடியில் இருந்து கொண்டு, உலகம் முழுவதும் நிறுவனங்களை நிறுவி, அதனை திறம்பட செயல் ஆற்றுகின்றார்கள்.

ஏறக்குறைய முந்நூறு ஆண்டுகள், லண்டனில் அமர்ந்து கொண்டு, இந்தியா, பாகிஸ்தான், பர்மா, பங்களாதேஷ், சிலோன் என்று மிகச்சிறப்பாக ஆட்சி செய்தார்கள்.

இங்க டில்லியிலே உட்கார்ந்து கொண்டு, தமிழகத்தில் உள்ள கிளையை சரிவர செயல்படுத்த தெரியலை.

நல்லவேளை,  மோதிலால் நேரு, தன் மகன் ஜவர்கலால் நேருவை அரசியலில் ஈடுபட வைத்தார். அது இல்லாது, குடும்ப பிஸினஸ் தொடர்ந்து இருந்தால், நிச்சயம், நேரு குடும்பம், டாட்டா அல்லது பிர்லா, அல்லது கோத்ரேஜ் என்று வர்த்தகத்தில் கொடிகட்டி பறந்து இருக்க மாட்டார்கள்.

பாட்டன் சொத்தை அனைத்தையும் நிர்வாகிக்க திறன் இல்லாமல் அழித்து, நடுத்தெருவில் நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டு இருந்திருக்கும்.

அரசியலில் ஈடுபட்டதால், இத்தனை காலம் ஏதோ சமாளித்தார்கள். அதுவும், இவர்கள் குடும்ப திறமை காப்பாற்றவில்லை. காமராஜ், மற்றும் பலர், ஒரு வழியாக, அப்ப அப்ப காப்பாற்றி இருந்திருக்காங்க.

இந்திரா காந்தி வரலாற்றில், நெடுமாறனுக்கு ஒரு அத்தியாயம் உண்டு.

மாநில காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தவங்க எல்லாம்,  சூது வாது தெரியாதவெங்க.

தமிழகத்தில் மட்டும் அல்ல; ஆந்திரா; கர்நாடகம்; மஹாராஷ்டிரம்; வங்காளம் என்று அனைத்து மாநில காங்கிரஸ் கட்சிகாரங்க, நேர்மையான அரசியல் நடத்தமட்டுமே அறிஞ்சவெங்க.

இன்றைக்கு வளர்ந்து இருக்கும் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் தான்.

கோளாறு டில்லியிலே தான்.

மாநிலங்களில் இருந்து, நன்றாக ஜால்ரா அடிக்கும் கலையை பயின்றவன்; டில்லிக்கு போயிடுறான்; அங்கேபோய் அமைச்சரும் ஆயிடுறான்.

நேர்மையாக இருப்பவனை, வாயை மூடி அடைத்து வைத்து விடுகின்றார்கள்.

அப்புறம் எப்படி நிறுவனம் வளரும்.

இதுவரைக்கும் அடிமையாக, ஊமையாக இருந்தது போதும். மனம் தொறந்து பேசுங்க; உள்ளத்தில் இருப்பதை கொட்டி தீர்த்து விடுங்க.  நிலைமையை எடுத்துரையுங்க.

மாநிலம் மாநிலமாக, கூட்டணிக்காக தவம் கிடந்தது போதும். எங்களோடு கூட்டணி வையுங்கள், என்று எடுத்துரையுங்க.

மாநில நிறுவனங்களுக்கு பரிபூரண சுதந்திரம், உரிமையுடன் கேட்டு வாங்குங்க.

The parent congress organization shall make all its children as independent, autonomous organization.

Parent shall clearly define the policy; objectives.

Execution of those policy and accomplishment of those objectives are state child organization responsibility.

Parent expects good number of MPs from each child.

The child can work hard and become ruling party in the state.

Flag, election symbol - are just like franchising company

McDonalds Franchise

அண்ணாதுரை, எம்.ஜி.ஆர் எல்லாம் கூட்டணி கணக்குக்கு முக்கியத்துவம் அளித்ததில்லை.

இப்ப கூட்டணி கணக்குதான் முதன்மை நிலையை அடைந்திருக்கின்றது.

அண்ணாதுரை, காமராஜர் காலத்தில் எல்லாம், தொண்டர்கள், கூட்டணியைப் பற்றி கவலைப்பட்டதே இல்லை. அதெல்லாம், தலைவர் முடிவெடுத்துக்குவார் என்று அவரது ஆணைக்காக காத்து இருந்தார்கள்.

இன்னைக்கு சூழலில், தலைவனுக்கும் தன்னம்பிக்கை இல்லை; தொண்டனுக்கும் தலைவன்மீது நம்பிக்கை இல்லை. கூட்டணி சரி இல்லாவிடில், எலெக்‌ஷனுக்கு முன்னாடியே தொண்டன் மனச்சோர்வடைந்து விடுகின்றான்.

ஒரு தலைவனை பார்க்கும்போது, அனைவரும் சொல்வார்கள்; உன்னால் முடியும் என்று.

தலைமைப் பண்பு இல்லாத சூழலில், நல்ல கூட்டணியை உருவாக்க ஆண்டவன் அருள் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும் என்று வாழ்த்தி அனுப்பவேண்டிய நிலைதான்.

1995இல், ரஜினிகாந்த் பொங்கி எழுந்தார்.  டில்லியிலே இருந்தவங்களுக்கு ஒண்ணும் விளங்கவில்லை.

ரஜினிகாந்த், தமிழக மாநில காங்கிரஸை உருவாக்கி, தனது சைக்கிளையும் கொடுத்தார்.

அந்த தருணத்திலும், ரஜினிகாந்த், தலைமைப் பண்பு உடையவரை தேடினார்; ஒருவரும் கண்ணில் படவில்லை.

ஆக, ரஜினிகாந்த், கூட்டணி உருவாக்கினார்.

உங்களாலே, தனியாக செல்ல இயலாது; துணைக்கு, அவுங்களை சேத்துக்கோங்க என்று சொல்லிட்டார்.

தனியாக களத்தில் இறங்கும்போது, நிச்சயம், தங்க மெடலோ, வெள்ளி மெடலோ கிடைக்கப்போவதில்லை.

ஆனால், நம் கால்கள் வலிமை அடையும்.

தலைவனுக்கு நம்பிக்கை உறுதி பெறும்;  களத்தில் முன்நின்ற வேட்பாளர்களும், களப்பணியாற்றிய தொண்டர்களும், ஒன்று சேர்ந்து, தண்ணி அடிப்பாங்க பாருங்க; அங்கே உறவு வலுவடையும்.

சும்மா ஒரு சீட்டு; இரண்டு சீட்டு என்று மெல்ல மெல்ல முன்னேறி, மக்கள் மனதில் இடம்பெறவில்லை, அண்ணாதுரையும்; எம்.ஜி.ஆரும்.

ஆக, மாநில நிறுவனங்களுக்கு, பரிபூரண சுதந்திரம் - அதுவே இறுதி மருந்து.

No comments:

Post a Comment