Tuesday, April 15, 2014

உனக்கு 40; எனக்கு 243


மிகவும் எளிதாக தீர்வு கண்டு இருந்திருக்கலாம்.
சோ இராமசாமி, மிகவு எளிதாக, எல்லோருடைய பிரச்சனையையும் தீர்த்து வைத்து இருக்கலாம்.
சினிமா என்றால், மிகவும் இயல்பாக, இது நடந்தேறி இருக்கும்.
நிஜம் என்பதால், குழப்பமான நிலையும்; அதைத் தொடர்ந்து போராட்டமும்.

ஜெயலலிதாவும், விஜய்காந்தும், சோவைப் பார்த்து;
ஐயா சாமி. சாப்பிட்டது போதும்.
எங்களுக்கு ஒரு தீர்வு சொல்லுங்க.

சோ, நிதானமாக, அப்படியா;
உனக்கு என்ன வேண்டும், என்று ஜெயலலிதாவைப் பார்த்து கேள்வி.
ஜெயலலிதா சொல்கிறார். எனக்கு 40.

பிறகு, சோ, விஜய்காந்தை பார்த்து கேட்கிறார்.
உனக்கு என்ன வேண்டும்.
விஜய்காந்த் சொல்கிறார். எனக்கு 243.

சரி. நீ உங்கிட்ட இருக்கிற 243 சட்டசபை உறுப்பினர்களை, அவருக்கு கொடுத்துடு.
அவரு, உனக்கு 40 பாராளுமன்ற உறுப்பினர்களை தந்திடுவார்.

கொஞ்சம் விவரமாக சொல்லுங்க்.

வேட்பாளர் வாபஸ் வாங்குற கடைசி நாள்.
நீ, முதல்வர் பதவில் இருந்து ராஜினாமா.
வேறு யாரும் போட்டி இல்லாத சமயத்தில், உனக்கு நாற்பதும் கிடைச்சுடும்.

இவுங்க எல்லோரும் சேர்ந்து, தமிழகத்தில், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கூட்டணி ஆட்சி.

அதாவது, விஜய்காந்த்; ஸ்டாலின்; வாசன்; இராமதாஸ்; வைகோ; கம்யூனிஸ்ட்.
அனைவரும் சேர்ந்து கூட்டணி ஆட்சி.

நான், நாற்பதும் கிடைத்தும் மத்தியில் ஆட்சி அமைக்க முடியாவிடில்?

அதுக்கு நாங்க என்ன பண்றது.
நீ, நாற்பது கேட்டே;
அதை கொடுத்தாச்சு;
மகளே, இனி உனது சாமார்த்தியம்.

ஆக, எலெக்‌ஷனே இல்லாமல், தீர்வு கண்டு இருந்திருக்கலாம்.
எலெக்‌ஷன் செலவை சேமிச்ச பணத்திலே, மக்களுக்கு நல்லது ஏதாவது செஞ்சு இருந்த்திருக்கலாம்.

ஜெயலலிதாவும், விஜய்காந்தும் - சிந்திக்கத் தொடங்கி விட்டாங்க.

நம்ம குஜராத் ஆசாமிக்கு, தலையும் புரியலை; காலும் புரியலை.

ஏ, கியா ஹோ ரகஹா ஹை.

உனக்கு இங்கே என்னையா வேலை.
எங்களோட வயகாட்டுக்கு வந்தாயா;
அங்கே கொஞ்சி விளையாடும் எம் குலப் பெண்களுக்கு மஞ்சள் அரைத்துக் கொடுத்தாயா

இந்த மாதிரி தீர்வை, சோ இராமசாமி அளித்திருக்க முடியாது.

களத்தில் இறங்கி விளையாடும் ஆட்கள், சிந்தனை வேறு.
ஓரமாக மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு,
களத்தில் விளையாடுபவர்களை விமர்சனம் செய்பவர்கள் சிந்தனை வேறு.

கே. பாலச்சந்தர் - இந்த மாதிரி தீர்வுக்கு கொண்டு வந்து நிறுத்தி விடுவார்.
அந்த ஆற்றல் படைத்தவர் கே. பாலச்சந்தர்.

அதன் பிறகு, சங்கர்.
கட்சி இல்லாமல், சின்னம் இல்லாமல், ஒரு நாள் முதல்வனை உருவாக்கினவர்.

No comments:

Post a Comment