Thursday, April 24, 2014

குஜராத் திருடர்கள்


திட்டம் போட்டுத் திருடுற கூட்டம்
திருடிக்கொண்டே இருக்குது-அதைச்
சட்டம் போட்டுத் தடுக்கிற கூட்டம்
தடுத்துக் கொண்டே இருக்குது
திருடராய் பார்த்துத் திருந்தாவிட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது 

எவ்வளவுதான் சட்டம் போடுறது.



தேர்தல் பிரச்சாரம் எல்லாம் முடிஞ்சு, இரண்டு நாள் தெருவெல்லாம் அமைதியாக இருந்து, இன்னைக்கு தேர்தல் நடத்தலாம் என்றால், தொலைக்காட்சியில நேரடி ஒளி பரப்பு. காசியிலே இருந்து நேரடி ஒளி பரப்பு.

ஓட்டுப் போடலாம் என்று வீட்டை விட்டு கிளம்புறவங்க, தொலைக்காட்சியிலே காசியிலே நடக்கின்ற ஆர்ப்பாட்டத்தை பார்க்கும்போது, என்ன மனநிலை ஏற்படும்.

அந்த ஆர்பாட்டத்தை பார்க்கும்போது, தேர்தலே அவசியம் இல்லை; அவரு ஏற்கனவே ஜெயித்து, பிரதம மந்திரி ஆயிட்டார் என்றுதானே தோன்றும். 

என்னவொரு கள்ளத்தனம்.

குஜராத்தில் வேட்புமனு தாக்கல் செய்யும்போது, கர்நாடாகாவில் வோட்டுப்பதிவு நடக்குது.

இப்ப, காசியில் வேட்புமனு தாக்கல் செய்யும்போது, தமிழகத்தில் வோட்டுப்பதிவு நடக்குது.

அடுத்த வோட்டுப்பதிவுக்கு, என்ன திட்டம் வெச்சிருக்காங்களோ, இந்த குஜராத் திருடர்கள்.

இந்த இரண்டு பேரும், நரேந்திர மோடி மற்றும் அமித்சா - மோகந்தாஸ் கரம்சந்த்க்கு முழுக்க முழுக்க எதிர்குணம் கொண்டவர்கள்.

இந்திய அரசியலில், இந்த அளவு தந்திரம் படைத்தவர்கள், சமீப காலங்களில் வந்ததில்லை.

அநியாயத்துக்கு, பொல்லாத குணம் கொண்டர்வகளாக வலம் வருகின்றார்கள்.

இவெங்களுக்காக புதுசாவா சட்டம் போட முடியும்.

இந்தியா, ஒரு சத்திய தேசம். இவ்வளவு ஆட்டம்; தேவையில்லாத ஆட்டம்.

ஆடிய ஆட்டம் என்ன;
கூடிய கூட்டம் என்ன;
கூடுவிட்டு ஆவிபோனால், கூட வருவதென்ன

பூமி தாங்காது.
இன்னும் அதிகாரம் கைக்கு வரலை
அதுக்குள்ளே இத்தனை ஆட்டம்.

அதிகாரம் மட்டும் கைக்கு வந்துடுச்சுன்னா;
இவெங்க இரண்டு பேரையும் கையிலே புடிக்க முடியாது.

இவெங்க மேலே இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையையும் இழந்துக்கிட்டு இருக்காங்க.
 

No comments:

Post a Comment